
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களையும்,
கழக இளைஞரணி செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களையும் சந்தித்து,
நாடாளுமன்ற உறுப்பினராக 2019 - 2025 வரையில் நான் ஆற்றிய பாராளுமன்ற பணிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தேன்! இந்த பொறுப்புக் காலத்தில், மாண்புமிகு தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், 17 தனி நபர் மசோதாக்களை வெற்றிகரமாக தாக்கல் செய்திருக்கிறேன்..787 விவாதங்களில் பங்கேற்றிருக்கிறேன் மற்றும் 347 க்கும் மேற்பட்ட கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளேன். மேலும், மாண்புமிகு குடியரசுத் தலைவர், மாண்புமிகு பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், மாண்புமிகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் தொடர்பாக 41 க்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ளேன். கடந்த ஆறு ஆண்டுகளில், நாடாளுமன்றத்தில் 96% வருகைப்பதிவையும், நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் 99% பங்கேற்பையும் பதிவு செய்திருக்கிறேன்.